உறக்கம் இல்லா பயணம்..!
தற்போதைய உடல்நிலையில் பிரயாணம் என்பது கூடாது. இருந்தாலும்
தொழில் சூழல் அதனை அனுமதிக்கவில்லை. பிரயாணம் செய்ய இயலாவிட்டால் வேலையில் இருந்து
விடுதலை பெறுவதே சிறந்தது. எனவே பிரயாணத்தை ஒரு சவாலாகவே செய்ய நினைக்கின்றேன்.
உயர்மட்ட அலுவலகக் கூட்டத்திற்காக அடுத்தடுத்த இரு இரவுகள்
கண்விழித்து பயணிக்கவேண்டிய சூழல் வந்தது. பகலில் படுக்க நேரம் கிடைக்கவில்லை. சரிவீடு
வந்தாகிவிட்டது இன்று நல்ல நித்திரை செய்ய நினைத்தால் தம்பியின் மகளின் துடக்குக்கழிவு
வந்து நிற்கின்றது..! பதறியடித்து, எழுந்து மற்றோரையும் கூட்டிக்கொண்டு அம்மாவீடு செல்ல
அனைவரும் எமக்காக காத்து இருக்கின்றார்கள்.
எனக்கு யாரையும் காக்க வைக்கப் பிடிக்காது. ஆனால் சூழல் தவிர்க்க முடியாமல்
அவ்வாறு அமைகின்றது. போகின்ற அவசரத்தில் கேற்
திறப்பை எடுக்காமல் கேற்றினைப் பூட்டிவிட்டோம். இனி, எவ்வாறு உள்ளே போய் எடுப்பது என்பது தெரியாமல்
சில நிமிடங்கள் தவித்தோம். பெண்பிள்ளைகள் என்பதால் கேற்றில் ஏறிக்கடப்பதும் கடினம்.
நானும் தற்போது உள்ள சூழலில் ஏறமாட்டேன். சில மணிகள் கழித்து, ஒருவாறு சமாளித்து, மூத்த
மகளின் உதவியுடன் உள்ளே சென்றுவிட்டோம். வீட்டைவிட்டு
வெளியே எல்லோரும் செல்லும் போது சரியான திட்டமிடல் இல்லைசென்றால் கதவை உடைக்கவேண்டி
வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இங்கு சேதாரமின்றி தப்பியது, எனது நுட்பத்தால்
வந்த பயனே..! இருந்தாலும் திட்டமிடல் தவறுகள் தொடர அனுமதிக்கக்கூடாது என அனைத்து ஏனைய
குடும்ப உறுப்பினர்களிடம் வேண்டிக்கொண்டு, மதிய உணவை தம்பி வீட்டிலே எடுத்துவிட்டு
வந்து படுத்தது தான், மணி இரவு 6.00 ஆகிவிட்டது.
பின்னர் மாலைத்தேநீரோடு, சாமத்தியவீட்டு இறுதிப்பலகாரங்களும் தட்டுக்களில் வந்தன. அவற்றையும்
உள்ளே தள்ளி, வெளியே வர, மரங்கள் அனைத்தும் கடும் வெயிலால் தலையைக்கவிழ்ந்து வாடி நின்றன. பார்க்க கஷ்டமாக
இருந்தது. பின்னர் அவற்றைக் குளிர்விக்க, தண்ணீர் விட்டேன். அப்போது அவை வெளியிட்ட
காற்று எனக்கு பெரிய புத்துணர்ச்சியைக் கொடுத்துக்கொண்டு இருந்தன. செம எனர்ஜி கிடைத்ததால்
இரவு 7.00 மணி தாண்டித்தண்ணீர் விட்டுக்கொண்டிருக்க, எமது நிறுவனத்தில் படித்த, ஒரு தெரிந்த எமது உறவினரை
திருமணம் செய்த மாணவியின் குடும்பம் வந்திருந்தார்கள். அவர்களோடு கலந்துரையாட நேரம்
10.30 மணி தாண்டிவிட்டது. பின்னர் குளித்து, இரவு உணவு உண்டு, சில வழமையான கடமைகள்
செய்து படுக்கப்போக அடுத்தநாள் அதிகாலை
12.30 ஆகிவிட்டது.
நல்ல உறக்கம். உடம்பு மீண்டும் புத்துணர்ச்சி அடைந்தது. முதலில்
கொழும்பு போகாமல் இருக்க நினைத்தேன். இப்போது, அனைத்துக்கடமைகளையும் முடித்த திருப்தியோடு
இருந்தேன்.
ஆ.கெ.கோகிலன்
16-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக