குப்பைத் தண்ணீர் வார்ப்பு

 


நிம்மதியான உறக்கம் முடிந்து வெளியில் வரும்போது பல கடமைகள் இருந்தன. வாசலில் கட்டிய வாழைகளை அகற்றவும், மீண்டும் வீட்டை பழைய நிலைக்கு கொண்டுவரவும் நிறைய வேலைகள் இருந்தன. வாழைகளை அகற்றும்போது மகளின் உதவியைக் கேட்க, அவள் சொதப்ப ஏசிவிட்டேன். பின்னர் முக்கி முக்கி நானே செய்து முடித்து, ஓரளவிற்கு மீள ஒழுங்கு படுத்தலையும் செய்ய களைப்பு மிகுதியாக இருந்தது.   இந்த நிலையில் எனது போன் அடிக்கடி அலறிக்கொண்டு இருந்தது. தற்போது எமது நிறுவனத்தில்  Admission  எடுப்பதற்கு ஒன்லைன் விண்ணப்பங்கள் கோரியுள்ளதால், வழிமுறைகள்  தொடர்பாக சந்தேகமுள்ள மாணவர்கள் எனக்கு போன் எடுப்பது வழமை. அலுவலக நேரங்களில் அவர்களுக்கு பதில் அளிப்பது எனது வழக்கம். மற்றைய நேரங்களில் எடுக்கும்போது, எனது வீட்டுக்கடமைகளைச் செய்யமுடியாது என்பதால் அதிகம் தவிர்க்கவே முனைவேன். வேலையில்லாமல் சும்மா இருந்தால் பதில் அளிப்பேன்.  இன்று வேலைசெய்ய களைப்பால் சிறிது உறங்க முடிவுசெய்து பாயில் படுத்துவிட்டேன். 15 நிமிடங்கள் தாண்டமுன்னர் மனைவி வந்து தட்டி எழுப்பி, ”என்ன தம்பி எத்தனை முறை போன் பண்ணியும் எடுக்கின்றீர்கள் இல்லை என்ற குறையுடன், தம்பியின் மகளும் பெரியபிள்ளையாகிவிட்டாள். உடனே வரட்டாம்,  குப்பைத்தண்ணீர் வார்க்க..!” என்றார். உடனேயே களைப்பு நீங்க முன்னர், வெறுத்தபடி என்ன இவ்வளவு விரைவாக.. என  எண்ணியபடி.. சில வாரங்கள் முதல் நடந்து இருந்தால் இரு பெண்களுக்கும் ஒன்றாக வைத்து முடித்து இருக்கலாம். ஆனால் இரண்டாவது மகளின் சடங்கு முடிந்த அடுத்த நாள் வந்ததும் இயற்கையின் விருப்பமே இதுவும்போலும்..!

சரி நடக்கட்டும் என்றபடி வெளிக்கிட்டு,  கேக் செய்ய உதவிய தட்டு மற்றும் பூக்கள் மற்றும் இரவுச்சாப்பாடு வந்த பாத்திரங்கள்  என்பவற்றையும் எடுத்துக்கொண்டு, போதாததற்கு சில வாழைச் சீப்புக்களையும் எடுத்துக்கொண்டு காரில் கிளம்பினேன். முதலில் மனைவியும் கூட வருவதாக இருந்தார். பின்னர் இரண்டாவது மகளை ரியூசன் கொண்டுசென்று விட்டதால் கூட்டிவர வேளைக்கு வரவேண்டும் என்று மோட்டார் சைக்கிளில் வந்தார்.  என்னுடன் கூட மூத்த மகளும் வந்தாள்.

குப்பைத்தண்ணீர் வார்ப்பு சிறப்பாக நடந்தது. மதியச்சாப்பாடும் தந்தார்கள். நான் சாப்பிடாமல், வீட்டுக்கு கொண்டுவந்து சாப்பிட்டேன். மாலை சில உறவுகள் சாமத்தியவீட்டுக்காக வந்தார்கள். இரவு வழமைபோல் பொழுதுபோனது. அத்துடன் கடிதம் கொடுத்தவர்களின் பெயர், விபரங்களை ஒரு டயரியில் குறித்துக்கொண்டேன். தந்தவர்கள் கொடையாளிகள். நான் கடனாளி..! இவற்றைக்கொடுத்து முடித்தால் தான் எனக்கு நிம்மதி..!

 

ஆ.கெ.கோகிலன்

10-06-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!