சோதிக்கும் நாட்கள்..!
தனியார் வகுப்புகள் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது தொடர்பில் ஆய்வுகள் செய்யப்படவேண்டும். வியாபாரப் போட்டிகளுக்காக பிள்ளைகளுக்கு கிடைக்கும் சிறிய காலப்பகுதியையும், அவர்களைச் சிந்திக்க விடாமல் ஒரே விடயத்தைத் திரும்பத்திரும்பச் சொல்லி, பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள். இதை சில பெற்றோர்களும் விரும்புகின்றார்கள். உண்மையில் பிள்ளைகளைச் சிந்திக்க விடுவதில்லை. இதன் விளைவு படிப்பு முடிந்ததும் துள்ளிக்குதிக்கின்றார்கள். மோட்டார் வண்டிகளில் பறக்கின்றார்கள். சந்தோசமாக இருப்பதற்காக தனக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் கேடான விடயங்களை செய்து, தாம் பெரிய சாதனை செய்ததுபோல் திரிகின்றார்கள். எதனையும், அவரவர் விருப்பத்துடன் செய்யவேண்டும். அப்போது தான் அதன் முழுப்பலனையும் அடையமுடியும். வற்புறுத்தலூடான கடினபயிற்சி மூலம் பெரிய வெற்றியைப் பெறமுடியுமா என்பது எனது சந்தேகம். ஆனால் அதனை விருப்பத்துடன் செய்தால் இன்னும் அதிக வெற்றியைப்பெறமுடியும். இயற்கையின் ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. அது நமக்குப் புரியாது. ஒருவர் போகும் பாதையில் மற்றவரும் போக நினைத்தால், பாதை வேண்டும் என்றால் இலகுவாக இருக்கும். ஆனால் வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமே..!
சரிவிடயத்திற்கு வருவோம். சமாத்தியவீடு செய்யவேண்டிய எனது
இரண்டாவது மகள், தொடர் பிரத்தியேக வகுப்புக்களால், காலை முதல் மாலைவரை அவளைப் பார்க்கவே
முடிவதில்லை. பாடசாலை விடுமுறைவிட்டுள்ளது. ஆனால் பிள்ளைகளுக்கு விடுமுறையில்லை. இது
ஒரு விதமான சமூகக்கொடுமை. பிள்ளைகள் மீது அழுத்தங்களை ஏற்படுத்தும் ஒரு கொடுமை. கல்வி
என்பது அனைவருக்கும் வேண்டும். இங்கு கல்வி வழங்குவது என்ற போர்வையில் கல்வி வியாபாரப்
போட்டியே நிகழ்கின்றது. பல பெற்றோர் பிள்ளைகளை தனியார் வகுப்புகளுக்கு அனுப்பிவிட்டால்
வீடு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்று நம்புகின்றார்கள். ஆனால் உண்மை பிள்ளைகளின்
நிம்மதி போய்கொண்டிருக்கின்றது. அவர்களின் மனங்களும் விகாரமடைகின்றன. விளைவு சமூக அக்கறையற்ற வியாபார போட்டிகொண்ட சமூதாயமே எதிர்காலத்தில் அதிகரிக்கும்
அபாயம் உள்ளது.
இந்த கொடுமையான சூழலில், சைக்கிளில் சென்ற எனது மகள் திறப்பைத் தொலைத்ததால் குழப்பத்துடனும், அழுகையுடனும்
வீட்டுக்கு வந்தாள். விசாரிக்க தொலைத்தததைப்பற்றி சொல்லி, கவலைப்பட்டாள். இன்னொரு சாவி
வீட்டில் இருக்க வேண்டும் தேடிப்பார் என்று சொல்ல, அதனை எடுக்க முடியவில்லை. பின்னர்
பூட்டை உடைத்து, வீடுவந்தாள். அதேபோல் நானும்
வேலைக்குச் செல்லும் போது, Accelarator உம் முன் பிறேக்கும் சரியாக வேலைசெய்யாதபடியால் விபத்துக்கள்
ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டது. மகளின் கவலையையும் பார்த்து வந்ததால் மனம்
இன்னும் குழப்பமாக இருந்தது. ஏன் இவ்வளவு சிக்கல்கள் வருகின்றது என்ற கேள்வியும் எழாமல்
இல்லை. இருந்தாலும், இவை கடமை. செய்வோம். முடிந்தவரையில்
சிறப்பாகச் செய்வோம். சில நாட்கள் நமக்குச்
சாதகமாகஇருக்கவில்லை என்பதற்கு இந்த நாளும் சாட்சி.
ஆ.கெ.கோகிலன்
05-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக