காலவேகம்..!

 



எனக்கு சொந்தத் தம்பிகள் தவிர, உறவு முறையில் பல தம்பிகள் இருக்கின்றார்கள்..! அவர்களில் பலரின் தொடர்புகள் சுத்தமாக இல்லை. குறிப்பாக அவர்களில் அதிகமானோர் இலங்கையில் இல்லை.

திருகோணமலையில் கூட ஒரு தப்பி இருந்தார். அவர் திருமணம் முடித்து, தற்போது யாழ்ப்பாணத்தில் தான் இருக்கின்றார். அவரை வீட்டுக்கு அழைத்து ஒரு விருந்துகொடுக்க நினைத்தேன். காலச்சூழல் தாமதமாகிவிட்டது.

அண்மையில் மகளின் சாமத்தியவீட்டுக்கு காட் கொடுக்கப் போக தீர்மானித்த நேரத்தில் அவரது சின்னம்மா மரணித்ததால், எல்லாம் தகர்ந்தது. தற்போது சாமத்தியவீடு முடிந்ததால் நேற்று அவரின் தாயாரைப் பார்த்துவிட்டு வந்தேன். இன்று அவரின் உதவியுடன், ஒருவேளை உணவை வழங்கத் திட்டமிட்டு அவரிடம், அந்தப்பொறுப்பை ஒப்படைத்தேன்.  அப்போது தான், அவரது வீட்டுக்குச் சென்றேன். ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த திருமணநிகழ்வுக்கு பொது மண்டபத்திற்குப் போன பின்னர் இன்று மாலை தான், வீட்டுக்குப்போனேன். ஒரு ஆச்சரியம் காத்து இருந்தது. தம்பிக்கு ஒரு அழகான மகள் பிறந்து ஏழு மாதமுமாகிவிட்டது..! ஆனால் அதுபற்றி நான் அறியவோ அல்லது அவனாவது  சொல்லவோ இல்லை. நான் இன்னும் பிள்ளை கிடைக்கவில்லை எனநினைத்துக்கொண்டிருந்தேன்.  அவசர வாழ்க்கைச் சூழல் வீடு, வேலை என்று போய்கொண்டிருந்ததால், இதனைக்கவனிக்கவில்லை..! இன்று அவனிடம் சென்றபோது கூச்சமாக இருந்தது. 2022 இல் துக்க நிகழ்வு இருந்ததால் மனைவியும் ஒன்றுக்கும் வருவதில்லை..! 2023இல் நிலைமை எமக்கு மாறும் போது பல விடயங்கள் மற்ற இடங்களில் நடந்திருந்தன..! காலம் தனது கடமைகளைச் செய்துகொண்டு தான் இருக்கின்றது. நாம் தான் சில சமயங்களில் காலத்தைக்கவனிப்பதில்லை. கவனிக்கும்போது பல தூரம் பயணித்திருக்க வாய்ப்புண்டு. திரும்ப கடந்த இடங்களுக்குச் செல்லமுடியாது.

ஆக இனிச்செய்யவேண்டியது, செய்யக்கூடிய கடமைகளையாவது நேரத்தோடு செய்ய வேண்டும். இல்லை என்றால் இந்தத் தம்பியின் மகளும் வளர்ந்து பெரிய பிள்ளையாகும்போது தான் அவளுக்குப் பெரியப்பாவைத் தெரியவரும். காலவேகம் புரியும்..!

 

ஆ.கெ.கோகிலன்

22-06-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!