எதிர்மறை எண்ணம்..!

 

 


நான் இன்று சாமத்தியவீட்டுக்கு என்று காட் கொடுக்கச் செல்லும் போது எனது மாமாவிற்கு கொடுத்துவிட்டுச் சென்றேன். அவரும் தயங்கியபடி அதனை  ஏன் எனக்குத் தந்துவிரயப்படுத்துகின்றீர். நான் வரமுடியாது என்பது தெரியும் தானே என்றார். அவரது மனைவியின் தமக்கையார் அண்மையில் இறந்துள்ளார். அதனால் இப்படியான விடயங்களில் கலந்துகொள்வது நல்ல அல்ல என்பது எமது மக்களின்  வழமை.  இருந்தாலும் நான் போதிய காட்களை அடித்ததால்  அவருக்குக் கொடுக்கும்போது ஒன்றும் குறைந்துவிடாது. எனக்கு அவருக்கு இந்த விடயத்தை உத்யோகபூர்வமாக நான் தெரிவிக்க வேண்டும் என்பதே எண்ணம்.

 இதன் பின்னர் மூளாய் பகுதியில் உள்ள உறவுகளுக்கு சொல்ல வெளிக்கிட்டேன். இந்தப்பகுதிப் பாதைகள் எல்லாம் மிகமோசமாக கிடக்கின்றன. போகும்போதே, இடையில் எனதுமோட்டார்வண்டியின்  எண் தகட்டிற்கான பட்டம் ஒன்று உடைந்துவிட்டது. இன்று போயா தினம். கடைகள் திறப்பது குறைவு. இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. காரியத்தை ஒருவாறு முடித்துக்கொண்டு திரும்புவோம் என்ற கொள்கையுடன் சென்று திரும்பினேன். வரும்போது இடையில் எண் தகடே கழன்று வீதியில் விழுந்தது..! அதனை எடுத்துக்கொண்டு,  நேரடியாக வீடு திரும்பினேன். பின்னர் மோட்டார் கராஜ்ஜூக்கும், வெல்டிங் பட்டறைக்கும் அலைந்து, ஏறக்குறைய ரூபாய் 700  இற்கு வேலையை முடித்துவிட்டு வீடுவந்து, ஓய்வு எடுத்தேன்.  செத்தவீடு நடந்த இடத்திற்குச் சென்று, கார்ட் கொடுக்கப்போனதால் முற்றாக வேலையை முடிக்காமல், செலவுடன் திரும்பியது, பழைய மனிதர்கள் சொல்வது பலிக்கும் என்பது போல நடந்த நிகழ்வுகள் இருந்தன.

போகும்போதே அந்த எண்ணம் இருந்ததால், முடிவும் அவ்வாறே அமைந்துவிட்டது. எண்ணம் மிகவும் பயங்கரமானது. நல்ல எண்ணங்களையே வளர்க்க வேண்டும். தவறான எண்ணங்கள் நம்மையே அழித்துவிடும்.   குறிப்பாக எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். அதற்கு ஒரே வழி இயற்கையை அல்லது இறைவனை அல்லது தன்னையே நம்பவேண்டும்.

 

ஆ.கெ.கோகிலன்

03-06-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!