ஏட்டுச் சுரக்காய்..!

 

 


பொதுவாக வியாழக்கிழமை என்றால் எனக்கு சோதனை அதிகமாக இருக்கும். காலை அலுவலகம் போனதுமே சோதனை காத்திருந்தது..! இரு நாட்களுக்கு முன்னர் விசேட ஊழியர் கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு மாறான ஒரு நிலைப்பாட்டில் ஒரு ஊழியர் இருந்தார். உண்மையில் அன்றைய தினம் அவர் சமூகமளிக்கவில்லை. இருந்தாலும், அவரைத் தொடர்புகொள்ள முயன்றும் அது நடைபெறவில்லை. நேற்று அவரையே எனக்கான பதில் கடமையை ஆற்றக்கோரியிருந்த வேளை, அதனை ஏற்றவர் தனது நிலைப்பாட்டைச் செய்யத் தயங்கிவிட்டார். இன்று நான் வந்ததும், அதனை ஒரு முக்கிய விடயமாகத் தெரிவித்தார். அதனைத் தீர்க்க நானும் முயன்றேன். எதிர்பார்த்த முடிவு  அமையவில்லை. அடுத்த கூட்டத்தில்  அதனைப்பற்றி அலசுவோம் என்று சொல்லிவிட்டு அடுத்த விடயத்திற்குப் போய்விட்டேன்.

ஒரு நாள் லீவு எடுத்தால் வேலைகள் மடங்காகிவிடும். அதனால் லீவு எடுப்பதை இயன்றவரை தவிர்க்க விரும்புவேன். இருந்தாலும் சில சூழல்களில் எடுத்தேயாக வேண்டியநிலை ஏற்படும்.  நாளையும் முக்கிய ஒரு குடும்பத்தேவைக்காக லீவு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, நிம்மதியுடன் இருக்க, இரண்டாவது மகளிடம் இருந்து வந்த அழைப்பு அனைத்தையும் தகர்த்துவிட்டது. சின்ன மகள் என்றாலும், கெட்டித்தனம் இருந்தாலும் ஒரு சூழலைப்புரிந்து கொள்ள முடியாமல் தானும் சிக்கி, எம்மையும் சிக்கவைத்து, போட்ட திட்டங்களை தகர்த்துவிட்டாள். கோபமாக அவளைக்கடிந்ததுடன், அவளின் அறியாமைக்கு கண்டிப்புடன் ஆலோசனைகளை வழங்கியதுடன், நாளைய லீவையும் தவிர்த்து,  ஏற்பாடுகள் தொடர்பான நபர்களுக்கும் அறிவித்து சூழலைப் புரியவைத்தேன்.

சிறுவர்களின் சின்ன சிந்தனைகளால், ஏற்படும் இது போன்ற சிக்கல்களைத் தவிர்க்க பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்கவேண்டும்.  சும்மா படித்தால் மட்டும் போதாது. செயற்பாட்டிலும் அது தெரியவேண்டும். அப்போது தான் படித்த கல்விக்குப் பயன் உண்டு. இல்லை என்றால் ”ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது..” என்பது போல தான்..!

 

ஆ.கெ.கோகிலன்

22-06-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!