மக்களின் பொருளாதார நிலை..!

 


அண்மையில்
  வைத்த எனது சாமத்தியவீட்டு செலவுகளையும் வரவுகளையும் வைத்துப்பார்க்கும்போது தெரிகின்றது மக்கள் வாழ்வதற்கு எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள் என்பது..! பணப்புழக்கம் குறைந்துள்ளது..! சின்னப்பொருள் வாங்க பெரிய தொகை கொடுக்கவேண்டியுள்ளது. ஆனால் அரசால் அதனை ஈடுசெய்ய முடியவில்லை. தனியார் நிறுவனங்கள் தமது சேவைகளுக்கான விலைகளைக் கூட்டுவதால், ஊழிர்களின் சம்பளங்களில் சிறிய அதிகரிப்பை ஏனும் செய்ய முடிகின்றது. ஆனால் அரச ஊழியர்கள் நிலைமை..? பலர் நாட்டை விட்டே ஓடுகின்றார்கள்..! யுத்தத்தைவிடக் கொடுமையானதாகப் பார்க்கப்படுகின்றது இந்தப்பொருளாதாரச் சுமை. ஏறக்குறைய 17 இலட்சம் அரச ஊழியர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள். அனைவரின் நிலையும் இது தான். இருந்தாலும் அடிமட்ட ஊழியர்கள் மேலும் திண்டாட வேண்டியுள்ளது. உயர்மட்ட ஊழியர்கள் நாட்டுக்கு வரி செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனது சாமத்திய வீட்டுக்கு 500 பேருக்கு உணவு என மண்டபத்தில் ஏற்பாடு செய்தேன். ஒருவருக்கு 1200 ரூபா என்ற வீதத்தில் 6 இலட்சம் ரூபாய் சாதாரண உணவுக்கு மட்டுமே தேவைப்பட்டது.  இதைத்தவிர வரவேற்பு அட்டை மற்றும் அன்பளிப்பு எனக்குறைந்தது ஒருவருக்கு 300ரூபாய் தேவைப்பட்டது. ஆகமொத்தம் ஒருவருக்கு செலவாக 1500 ரூபா வரும். ஆனால் தற்போதைய நிலையில் சாதாரண ஒருவரால் 1000ரூபாய் தாண்டி அன்பளிப்புச் செய்வது மிகக்கடினம். நாட்டின் மற்றும் வீட்டின் பொருளாதாரம் அப்படி இருக்கின்றது.

இப்படியான நிலையில் செலவுசெய்த பணத்தில் மூன்றில் ஒன்றையேனும் எடுப்பதே முயல்கொம்பு. பதிலாக, வரவைப்பற்றிக்கவலைப்படாமல், நமது திருப்திக்காகச் செலவுசெய்தால் நிச்சயம் கவலைப்படத்தேவையில்லை. நல்ல மனநிறைவு கிடைக்கும்.

நானும் இந்தவகையில் சேரவே ஆசைப்பட்டேன். அதனால் சாமத்திய வீட்டைச் செய்துமுடித்ததே பெருவெற்றியாக மனம் எண்ணுகின்றது. ஆனால் பொருளாதார ரீதியாகப் பார்த்தால், வரவைத்தாண்டிய பல மடங்கு செலவு என்பதை யாரும் மறுக்க முடியாது. விரும்பினால், குடும்ப உறவுகளின் ஒத்துழைப்போடு இப்படியான நிகழ்வுகளைத் தவிர்க்கலாம்.

சந்தோசமே முக்கியம் என்றால் பணத்தைப்பற்றி யோசிக்கக்கூடாது.

பொருளாதாரமே முக்கியம் என்றால் வரவுக்கு மிஞ்சி செலவுசெய்யக்கூடாது.

நான், சந்தோசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் பொருளாதாரம் பற்றி யோசிக்கவில்லை.

ஆனால் வந்தவர்களில் பலர் பொருளாதாரத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பது அவர்களது நடவடிக்கைகளில் இருந்து அறிய முடிந்தது.

 

ஆ.கெ.கோகிலன்

12-06-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!