தீ காயம்..
சின்ன வயதில் நான் மிகவும் குளப்படி செய்வேன். அதனால் பல
தளும்புகள் உடலில் உண்டு. அவற்றில் தீ காயங்கள் அதிகமாக வரும். நெருப்புச்சுட்டு அல்லது,
சுடுதண்ணீர் பட்டு அல்லது சூடான பாத்திரங்களைத்தொட்டு
காயப்படுத்திக்கொள்வேன்.
பின்னர் ஒருவயது வர மிகக்கவனமாக இருந்து காயங்கள் வராமல்
பாதுகாப்பாக இருக்க முனைவேன். அவ்வாறு நீண்டகாலம் தீ காயங்கள் இல்லாமல் இருந்துவிட்டு, நேற்று, சில வீடுகளுக்கு சாமத்தியவீட்டுக்காட்டினை
கொடுக்கச் சென்றேன். ஒரு நண்பரின் தமக்கை வீட்டுக்குச் செல்லும் போது, தவறுதலாக இன்னொருவர்
வீட்டுக்குள் சென்றுவிட்டேன். இரவு நேரம் என்பதால் சரியாக அடையாளப்படுத்த முடியவில்லை. மேலும் வெளியே வந்து, மோட்டார் சைக்கிளை எடுக்க
திறப்பை எடுக்கும்போது, காற்சட்டைப்பையில் இருந்த ரூபா.20 பெறுமதியான சிறிய கறுப்புச்சீப்பு
விழுந்துவிட்டது. உடனே அதனை எடுக்க முனைய அது சீற்றில் பட்டு, சைக்கிள் ரயருக்கு கீழ்
விழுந்துவிட்டது. பின்னர், அதனை அவரப்பட்டு எடுக்க, மோட்டார் சைக்கிளின் சைலன்ஸர் கடும்
சூட்டில் இருந்துள்ளது. கைபட்டதும் அள்ளிவிட்டது.
அதனுடன் அடுத்த வீட்டுக்குச் சென்று காட்டைக் கொடுத்துவிட்டு, அம்மாவீடு சென்று, பற்பசையை
சூடுபட்ட இடத்தில் பூசினேன். வலி தெரியவில்லை. பின்னர் வீடுசென்று, சாப்பிட்டுப் படுத்துவிட்டேன்.
விடிய எழும்பி வழமையான வேலைகள் செய்து குளிக்கும்போது தான் கைகாயம் தெரிந்தது. சிறிய
காயம் தான். ஆனால் பல காலத்திற்குப் பிறகு வந்த காயம்..! இக்காயமும் மனத்தைப் படபடக்க
வைத்தது..! வீடுவந்து, உறக்கத்திற்கும் போனதும் காயமும் மறந்து போனது. மூத்த மகளிற்கும் ஒரு காயம், எனது காயம் இருந்த கையிலே
வந்தது..! சில நாட்கள் இருவரும் ஒரே கையில் காயத்துடன் அலைந்தோம். நான் ஒன்றும் போடாததால்
அது மாறி மறைந்துவிட்டது. மகள் அதிக கவனம் எடுத்ததால் மாறாமல், சாமத்தியவீட்டு நிகழ்வுகளின்
போது கையில் ப்பிளாஸ்டர் போட்டே இருந்தார்.
ஆ.கெ.கோகிலன்
01-06-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக