உணவே சக்தி..! அன்பே மதம்..!
இன்று விஜயதசமி..! எமது ஊழியர்களின் பூஜை. ஏறக்குறைய 11.00மணிக்கு எல்லோரும் தயாராகிவிட்டார்கள். எனக்கும் அழைப்பு வந்தது, நானும் தயாராகி பூஜைக்குச் செல்ல, அங்கே வெளியில் இருந்து ஒரு அச்சகரை அழைத்து இருந்தார்கள். அவர் ஒரு இளைஞர்..! பூஜைகளை விரைவாக நடாத்தி முடித்துக்கொண்டு, குறிப்பாகச் சகலகலாவல்லி மாலை பாட, தீபமே காட்டாமல் இறுதியில் எல்லாப் பாடல்களையும் சேர்த்துப்பாடி முடித்த பின்னர் ஒன்றாகத் தீபத்தைக் காட்டினார்..! நேர முக்கியத்துவத்தைக் கவனத்தில் எடுக்கும் ஒரு 2கே கிட்ஸ் தான் அவர். சரி..! பொறுத்துக்கொள்வோம் என அமைதியாக இருந்தேன். வழமையாகப் பூஜைசெய்யும் எமது ஊழியரிடம் ஏன் மாற்றம் செய்தீர்கள் ..?என்று கேட்க கும்பம் சரிக்க நீங்கள் தான் உதவியிருக்க வேண்டும் என்றார். அதற்கு என்ன..? நானும் தயார் தான் என்றேன்.
ஜயர் தான் கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என்ற நிலையில் திருத்தம் செய்ய,
ஜயர்களிடமே ஆலோசனை கேட்க வேண்டும். அவர்களே மாற்றி மாற்றிச் செய்தால், பின்னர் யாரும்
அதனைச் செய்யலாம் தானே..!
விழா ஒழுங்கின் படி மாணவர்களின் சில கலாசார நிகழ்வுகளும் மண்டபத்தில்
ஒழுங்குசெய்து இருந்தோம். பிரசாதத்திற்கு முன்னுரிமை
கொடுத்து ஒரு சாரார் அங்கே இருக்க, நான் மாணவர்கள் பின்னால் கலாசார நிகழ்ச்சிக்குப்போக,
ஏனையவர்களும் வந்து சிறப்பித்தார்கள்..!
எனக்கு ஒரு வரவேற்புரைப்பேச்சுத்
தரப்பட்டது..! திடீரெனத் தந்ததால் மனதில் தோன்றியதைச் சொன்னேன். எமது சமயம் உணர்த்தும், துர்க்கா, லக்ஸ்மி,
சரஸ்வதி எனப்பல கடவுள்கள் என்றாலும் எல்லாம் ஒன்று தான் என்ற தத்துவத்தை, எமது நிறுவனத்தில்
படிக்கும் பல மத மாணவர்களிடையே பல மதங்கள் என்றாலும் எல்லாம் சொல்வதே ஒன்று தான்..! அது அன்பைப் பரப்பத்தான்..! ஒற்றுமைகளை வலியுறுத்தத்தான்..! சண்டைகளை நிறுத்தத்தான்..! ஆக மொத்தம் அன்பை விதைக்கத்தான்..!
இவ்வாறாகச் சொல்லி, அனைவருக்கும் இயற்கையிடம் ஆசிவேண்டி அமர, ஒவ்வொரு
மாணவர் நிகழ்ச்சிகளும் மனதைக் குளிர்வித்தன..!
அதன்பின்னர், பூஜையறைக்குச் சென்று பிரசாதத்தை, அங்கே இருந்த எமது ஊழியர்களுடன் உண்டு,
ஏனைய கடமைகளில் ஈடுபட்டேன்.
மாலை வழமைபோல் சிறு உறக்கத்தின் பின்னர் உணவு எடுக்கச் செல்ல, உணவு
வழங்குபவரே உணவைக்கொண்டுவந்து தருவதாகக் கூறினார்.
நான் சொன்னேன் நானே வந்து எடுக்கின்றேன் என்று..!
மழைகாலம் என்பதால் பூச்சிகளின் தொல்லை கூடிவிட்டது. ஒரு வெளிச்சத்திற்கு
கிட்ட இருந்தாலே பூச்சிகள் உடலெங்கும் படும்.
சாப்பிட்டால், சாப்பாட்டிற்குள்ளும் விழும்..! என்ன செய்ய..? விழுந்தாலும் தூக்கி வெளியே போட்டுவிட்டு
சாப்பிட வேண்டியது தான்..! அரியண்டம் பார்த்தால் சக்தியின்றிச் சாயவேண்டியது தான்..!
சீனாக்காரர்களைப் பார்த்தால் கழிவு என்பதே
அவர்களுக்கு இல்லை எனலாம். எந்த உயிர் என்றாலும் அவர்களுக்கு அது உணவு தான்...! சக்தி
தான்..! ஆரோக்கியம் தான்..! அதனால் தான் என்னவோ வல்லரசுகளுக்கே சவால் விடும் சக்தியை
அந்நாட்டினர் பெற்றுவருகின்றர்..!
ஆ.கெ.கோகிலன்
12-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக