சென்னை எக்ஸ்பிரஷ்..!

 

 


ஏறக்குறைய 10 அல்லது 11 வருடங்களுக்குப் பிறகு தான், இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது..! அதற்கு இன்னோர் காரணம் எனது இரண்டாவது மகள். அவள் சொன்னாள், ”இந்தப்படம் ஒரு நம்பிக்கையைத் தருகின்றது என்றும், போரடிக்காமல் இருப்பதாகவும், பாடல்கள் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருப்பதாகவும், சாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் சிறப்பாக நடித்திருப்பதாகவும்..!”

படத்தைப்  பார்க்கும் போது, புரிந்தது அவள் சொன்னது அனைத்தும் உண்மை என்பது..!

ஒரு சாதாரண ஜனரஞ்சகப்படம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதற்கான உள்ளர்த்தம் அது தான்.

கதை என்று பார்த்தால் தாய், தந்தையற்ற மகன், தாத்தா பாட்டி பராமரிப்பில் இருக்க, ஒரு நாள் தாத்தா இறந்து போகின்றார். அவரின் அஸ்தியை கரைக்க இராமேஸ்வரம் போகச்சொல்கின்றார் பாட்டி..!

விளையாட்டுத்தனத்தால், அதனை கோவாவில் கரைக்க திட்டம் போட்ட பேரன், கடைசியில் இராமேஸ்வரம் கொண்டுசென்று கரைத்ததுடன், ஒரு காதலியையும், பல சவால்களுக்கு மத்தியில் பெற்று, லுங்கி டான்ஸ் எனப்பாட்டுப்பாடி, எங்கள் எல்லோரையும் சந்தோசத்துடன் அனுப்பியுள்ளார்..!

போதாததற்கு எமது சூப்பர் ஸ்டார் ரஜனியையும் திரையில் காட்டித் “தலைவா” எனக்கத்த வைக்கின்றார்கள்.

ஆக ஜனரஞ்சகப் பிரியர்களுக்கான கதையில், ஆங்காங்கே சில சென்டிமென்ட் காட்சிகளையும் வைத்து எல்லோரையும் கவர்பண்ணியுள்ளார் படத்தின் இயக்குனர் ரோகித் செட்டி.

இந்தப்படத்தில் இன்னோர் சிறப்பு என்னவென்றால், பல காட்சிகள் தென்னிந்தியாவில் படமாக்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் இலங்கைக் கடல் எல்லைவரை வந்துள்ளன..!

பல தமிழ், மலையாள மற்றும் தெலுங்கு நடிகர்கள் நடித்துள்ளார்கள். அதனால் தான் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எமது சத்தியராஜ் கூட இந்தப்படத்தில் தீபிகாவின் தந்தையாக, இறுக்கமான முகத்துடன் நடித்துள்ளார்.

அனைத்துப் பாடல்களும் தரம் என்றாலும் எனக்கு “கன்யாகுமாரி..” பாடல் மேலும் சிறப்பாக இருந்தது..!

ஏமாற்ற நினைத்தவர் திருந்துவதும், சண்டையில் வெற்றிபெற, உடல் பெரிதாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.. உள்ளம் பெரிதாக இருக்க வேண்டும்..! என்ற கருத்து,  என் மனதில் பசக்கென்று ஒட்டிவிட்டது..!

வெற்றிக்குத் தகுதியான படம் தான். இருந்தாலும் சில போலியான உணர்வற்ற காட்சிகளும் உண்டு..!

 


ஆ.கெ.கோகிலன்

19-09-2024.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!