நட்பு (Friedship)..!
எமது நாட்டு பெண்ணான
பிக்போக்ஸ் லொஸ்லியா என்ற புதுமுக நடிகை நடித்த இந்தப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு
இன்று தான் கிடைத்தது.
கதை என்று பார்த்தால், தான்
இறந்துவிடுவேன் என்று தெரிந்தாலும் இயந்திரப் பொறியியல் படிக்க இணையும் ஒரேயொரு பெண்,
தனியாக அங்கே படிக்கும் அனைத்து ஆண்களுடனும் அன்பாகப் பழகி, அனைவர் மனத்திலும் இடம்பெறும்
சமயம், காமக்கோடூரர்களின் கூட்டுப்பாலியலால் அவர் இறக்கின்றார்..! அவரது நட்புகள் தான்
காரணம் என்று சிறைக்குச் செல்ல, காரணத்தை கண்டறிந்து, நட்பின் புனிதத்தை மீட்கின்றார்
வக்கீலாக வரும் நடிகர் அர்ஜூன். அதற்காகச் சண்டைபோடுகின்றார்..! கோட்டில் வாதாடுகின்றார்..!
தான் முன்பு ஹீரோவாக இருந்ததை நினைவுபடுத்துகின்றார்..! அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்
இந்தப்படத்தில் லொஸ்லியாவின் தோழனாகவும், கோபப்படும் இளைஞனாகவும் நடிக்க முயல்கின்றார்.
இன்னும் நிறையப் பயிற்சிகள் வேண்டும். அதேபோல் தான் லொஸ்லியாவும். முயற்சி தெரிகின்றது, ஆனால் உணர்ச்சி தெரியவில்லை..!
ஏனையவர்கள் பரவாயில்லை. என்னைப்பொறுத்தவரை
எம்.எஸ்.பாஸ்கர் வக்கீலாகவே மாறியுள்ளார்..! அவர் மேல் அவ்வளவு வெறுப்பு வந்தது. நன்றாக
நடித்து இருந்தார்.
லொஸ்லியாவின் முதல்படம் என்ற
நினைப்பில் பார்த்தேன். எல்லாம் சராசரியைவிட
சற்று குறைவாக இருந்தது. குறைவான பட்ஜட்டில் எடுத்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
ஜோன் போல் ராஜ் மற்றும் சாம்
சூரியா என்னும் இருவர் சேர்ந்து இயக்கியுள்ளனர்..! எனக்கு, இன்னும் சிறப்பாக இயக்கியிருக்கலாம்
எனத்தோன்றியது.
ஆ.கெ.கோகிலன்
23-09-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக