அரசியலில் நடிகர்கள்..!
தமிழகத்தில் எவ்வளவு நன்றாகப் படித்திருந்தாலும் என்ன..? கண்டுபிடிப்புகள் செய்தாலும் என்ன..? மக்களை ஆளுவதற்கான தகுதியாக திரும்பவும் நடிகர்களை, மக்கள் தூக்கிக் கொண்டு வருவது தமிழர்கள் நிஜத்தையும் நிழலையும் ஒன்றாகவே தொடர்ந்து பார்க்கின்றார்கள் என்றே நினைக்கத்தோன்றுகின்றது..! இதற்கு அறியாமை காரணமா..? அல்லது தமக்குப் பிடித்த நடிகர் நாட்டை ஆண்டால், தாமே ஆண்டது மாதிரி என்று நினைக்கின்றார்களா தெரியவில்லை..?
இலங்கையில் பிறந்தாலும், கேரளாவைச் சேர்ந்த தமிழர் அல்லாத ஒரு மலையாளியைத்
தமிழர்கள் தமது தலைவராக ஏற்றுக்கொண்டதன் அடிப்படைக்காரணம் என்ன..?
“தமிழர்கள்” என்பவர்கள் தமது இனத்தை ஒதுக்கி, பிற இனங்களை வாழ வைப்பவர்கள்
என்று எடுத்துக்கொள்ளலாம்..! சுயநலம் இல்லாமல், வந்தாரை வாழ வைக்கும் பெரிய மனம் படைத்தவர்கள்
என்று சொல்லலாம்..!
ஆனால் எனக்கு தெரிவது, தமது மொழியையும், இனத்தையும் நேசிக்கும் சக்தியற்வர்கள்
என்றோ அல்லது ஒரே இனமானதால் எதிர்ப்புக் குணம்
கொண்டவர்கள் என்றோ எண்ணத்தோன்றுகின்றது..!
இப்போது தமிழ் நாட்டில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய்..! அவர்
தமிழர் என்று சொன்னாலும், அவரது தாயின் மொழி மலையாளம்..! தாயின் சமூகம் மலையாள பிரமணர்..!
தந்தை ஒரு கிறீஸ்தவ தமிழர் என்பதும் உண்மை தான். தந்தை மொழி தமிழ். உண்மையில் விஜயின் தாயின் மொழி
தமிழ் அல்ல..! ஆனால் தாய் மொழி, தமிழ் தான்..!
அதேபோல் அவர் மனைவி இந்தியர்
அல்ல..! இலங்கைத் தமிழர். பொதுவாகச் சொன்னால் உலகிலுள்ள இலங்கைத் தமிழர்களின் மாப்பிள்ளை
தான் விஜய்..! மலையாளமே தமிழ் மொழியுடன், சமஸ்கிரதமும்
சேர்ந்து உருவான மொழிதான். அப்படிப்பார்த்தால் எம்ஜியாரும், விஜயும் ஆதித்தமிழர் தான்.
இவ்வாறு இயற்கையாய் அமைந்த சில விடயங்கள் விஜக்கு பெரிய இடத்தைக்கொடுத்துள்ளது..!
தற்போது தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் தலைவனாக மாற எத்தனிக்கின்றார்..! ஆனால் உண்மையான சுத்தத் தமிழர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் மூடிக்கொண்டு
தான் இருக்கின்றார்கள்..!
2026இல் என்ன மாற்றம் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..?
90களில் மிகவுச்சத்தில் இருந்தவர் நடிகர் ரஜனிகாந்த. அவர் ஒரு மராட்டிய மொழியைச் சேர்ந்தவரென்றாலும்
கன்னடம் பேசக்கூடியவர். திரைப்படங்களில் நடிக்க வந்தபின்னர், தமிழ் படித்தார். தமிழ்
பிராமணப்பெண்ணை மணந்ததால் தமிழராகக் கருதப்பட்டார்..!
அரசியலுக்கு இதோ வருகின்றேன் எனச் சொல்லிச்
சொல்லி தற்போது 70ஐத் தாண்டியும், நடித்துக்கொண்டு தான் இருக்கின்றார்..! அரசியல் ஆசை உள்ளுக்குள் இருந்தாலும், தனது மவுசு
பாதிக்கப்படும் என்பதால் ஒதுங்கி இருக்கின்றார்.
நடிகர்கள் அரசியலுக்கு இவ்வாறாக வருவதும், விலகுவதுமாக இருக்க, அரசியல்
வாரிசான உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரமுதல் சினிமா நட்சத்திரமாக மாறினார்..! சில
வெற்றிகளைக்கொடுத்தார்..! வெற்றிகள் கிடைத்தாலும், அவரது நடிப்பு பெரிய அளவில் மக்களிடம்
எடுபடவில்லை..!
திரும்பத் தந்தையுடன் சேர்ந்து
அரசியலில் பயணிக்கின்றார். துணை முதல்வராகவும் செயல்படுகின்றார்..!
கலைஞரின் மகனும் முதலமைச்சராக வருவதற்கு முன்னர் , அவர் இளைஞராக இருந்தபோது,
திரைப்படத்திலும், நாடகத்திலும் நடித்து இருந்தார்..! அது, அவருக்கு கைகொடுக்காததால்
முழு நேர அரசியல் வாதியாக மாறி, தற்போது தமிழக முதல்வராகவும் இருந்து, குடும்ப ஆட்சிக்கு
இலக்கணமும், மரியாதையும் செய்கின்றார்..!
விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், நெப்போலியன் போன்றவர்களும் அரசியலில்
பயணித்துக் களைத்தவர்களே..!
இவர்களுள் விஜயகாந்த் அவர்கள், மக்களின் அன்பைப்பெற்று, எதிர்கட்சித்
தலைவராகி, இறுதியில் நோய்க்குள் மாட்டி, இலகுவில் காலனிடம் உயிரை இழந்தார்..!
அரசியலுக்காக நடிகரானவர்களும், நடிகர் என்பதால் அரசியலுக்கு வந்தவர்களும்
தமிழ் நாட்டின் அறிவிலித்தனத்தை உலகிற்கு தொடர்ந்து எடுத்துக் காட்டுகின்றார்கள்..!
நல்ல அறிஞர்களை, பண்பாளர்களை, மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்காதவர்களை ஏன் அரசியல் சாக்கடையை
சுத்திகரிக்க அழைக்கின்றார்கள் இல்லை..? சாக்கடையைச்
சகிக்கும் சாதனைக்கு, அவர்களே உண்மையில் சொந்தக்கார்கள்..!
ஆ.கெ.கோகிலன்
25-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக