பெரும் சீற்றம்..!

 



அண்மையில் சீனா, வியட்நாம் மற்றும் போலந்து போன்ற உலகின் பல பாகங்களில் கடும் காற்று மற்றும் மழையால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன..!  வீடியோ செய்திகளாகப் பார்க்கும் போதே படுபயங்கரமாக இருக்கின்றது. இவற்றின் தாக்கங்கள், நேரடியாக முகம்கொடுத்தவர்களுக்கே புரியும், இயற்கையினது கோரத்தாண்டவத்தின் உக்கிரத்தை..!

மனிதர்கள் விஞ்ஞானத்தை நம்பிப் பல காரியங்களை, இயற்கையின் தாக்கங்களையும், வீரியங்களையும் ஆராயமல் செய்ய வேண்டிய சூழலில்  தான் இருக்கின்றார்கள்..! இயற்கையும் அவ்வளவு சீக்கிரம் தன்னைப் படிக்க, உணர ஒருவரையும் அனுமதிப்பதில்லை..!

முயற்சியால் வான்னுயர வளர்ந்தாலும், அடுத்த நொடியே தரையில் கொண்டுவந்துவிடும் சக்தி, எல்லாவற்றையும் விட இயற்கைக்கே அதிகம் உண்டு..!

வழிபாடுகள் தோன்றியதே இயற்கையை மதிக்கத்தான்..!

எம்மால் கட்டுப்படுத்த முடியாத சக்தியைக் கட்டுப்படுத்தவே, மிகப்பெரிய மகா சக்தியாக, நாம் கடவுளை நினைக்கின்றோம்..!

மனிதர்கள் என்பதால் எம்மைப்போல்  இறைவனுக்கு உருவங்களைக் கொடுத்து, அல்லது அந்த சமூகக்குழுக்களின் அறிவு நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு விதங்களில் வழிபடுகின்றோம். மரியாதை செய்கின்றோம். கஷ்டங்கள் வரும்போது கண்ணீர் மல்க மண்டாடிக் கதறுகின்றோம்..!

அதனைக்  கடவுள் செவிமடுப்பது உண்டு..! கஷ்டங்கள் காணாமல் போவதும் உண்டு..! ஒரு நாளும் நிரந்தரமாக யாருக்கும் எந்த உத்தரவாதத்தையும் இயற்கை கொடுப்பதில்லை. நேரம் வந்தால் நாமும் இயற்கையின் கோரத்தாண்டவத்தைப் பார்க்க வேண்டிவரலாம். அதனைத் தடுக்க ஏதாவது வழியிருக்கா என்று யோசிக்கும் போது, கிடைத்த விடயம், நாம் 100வீதம் நன்மையே செய்தாலும், சாவு நிச்சயம்..! அதேபோல் 100வீதம் தீமையே செய்தாலும், சாவு நிச்சயம்.

நன்மை செய்யும்போது இயற்கையின் கை பலவிதங்கில் எம்மைத் துன்பத்தில் இருந்து சற்றுக்குறைக்கலாம்.

தீமை செய்யும்போது அவ்வாறு இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.

அவ்வளவு தான் வேறுபாடு..! உங்களுக்கு எந்த வழியில் பயணிக்கத்தோன்றுகின்றதோ அந்த வழியில் பயணிக்கலாம்.

சாவு நிச்சயம் என்றாலும், எப்படிச் சாகின்றோம் என்பது அதைவிட முக்கியம்..!

உணர்ந்து நடப்போம். இயற்கை தருவதை ஏற்போம். இயற்கை எம்மை முழு இறைவனாகப் படைக்கவில்லை. சில அம்சங்கள் மாத்திரம் எம்மில் இருக்கலாம்..!

 

ஆ.கெ.கோகிலன்

18-09-2024.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!