உடலே உணவு..!

 


ஒருவர் மரணித்தால், அவரது உடலைத் தாழ்ப்பது, அல்லது எரிப்பது பற்றி மட்டுமே அறிந்திருக்கின்றேன்.  சில இடங்களில், உடலைக் குகைகளில் வைப்பதையும் சில வீடியோக்களில் அண்மையில் பார்த்திருக்கின்றேன்..!

பருந்துகள், கழுகுகள், காகங்கள்  போன்றவற்றிற்கு உடலை உணவாக அளிப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா..?



ஆம். உலகில் சில இடங்களில் உள்ள சில இன மக்களின் பழக்க வழக்கங்கள் அப்படியிருக்கின்றன..! அண்மையில் இந்தியாவில் இறந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா என்பவர் பார்ஸ்ஸி (Parsi Zoroastrian family) இனத்தைச் சேரந்தவர்..! அவர்களது மரபுப்படி அவர்களின் இறந்த உடல்கள், காடுகளிலுள்ள உணவளிக்கும் வட்ட வடிவ பீடங்களில்  (Tower of Silence) உடல்கள் வைக்கப்பட்டு, பறவைகள், குறிப்பாகக் கழுகுகளுக்கு உணவாக அவை அளிக்கப்படும்..! மிஞ்சிய எலும்புகள் அல்லது வேறுபகுதிகள் அந்தக்கட்டடத்தின் அடிபாகத்தில் சேர்ந்து இருக்கும். காலப்போக்கில் அவையும் இயற்கை உயிர்களுக்கு உணவாகப் போய்விடும்..!

அவர்களின் நம்பிக்கைப்படி, நீரிலோ, நிலத்திலோ, நெருப்பிலோ  இறந்த உடலை வைப்பது ஒரு தவறான விடயமாகவே கருதுகின்றார்கள்..!

அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வழக்கம், உடலை ஏனைய உயிர்களுக்கு உணவாகப் படைப்பது தான்..!

ஆனால் கால மாற்றங்களும், வசதிவாய்ப்புக்களும் மனித எண்ணங்களில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளன..!

மின்சார மயாணங்கள் வந்த பிறகு, இப்போது பழைய பழக்க வழக்கங்கள் சிதைந்து விட்டன..! உண்மையில், இது இயற்கைக்கு வழங்கும் மிகப்பெரிய துரோகம் என்று தான் எனக்குத்தோன்றுகின்றது..! மீன் செத்தால், அதனைக் கருவாடாக்கி உண்கின்றோம். ஆனால், நாம் செத்தால் ஒரு உயிருக்கும் உணவாகக் கொடுக்கக்கூடாது என்ற சுயநல நோக்கில் உடலை எரித்து காபனாக்குகின்றோம்..! ஆனால் உடலைத் தாட்டாலும், எத்தனையோ உயிர்களுக்கு, அது உணவாகியிருக்கும். உணவுச்சங்கிலி அழகாகப்பேணப்படும்.  மனிதனுக்கும் எதிர்காலத்தில் உணவுக்குப் பஞ்சம் இருக்காது. தமது சுய நலன்களால், எல்லாவற்றையும் எரித்து கரியாக்கினால், சாம்பல் தான் எல்லோருக்கும் மிச்சம்..!

விபூதி மாதிரி, அதனைப்  பூசிக்கொண்டு திரியவேண்டியது தான்..!

ரத்தன் டாட்டா  உயிரோடு இருக்கும்போது, இதற்கு ஆலோசனை கேட்டிருந்தால், சில வேளை அவர் வழமைபோல்  பறவைகளுக்கு உணவாக்கும் படியே சொல்லியிருப்பார்.

மேற்கத்தைய நாடுகளின் ஆதிக்கங்களின் பிறகு, இப்படியான பழக்கவழக்கங்களைக்கொண்ட பல பிரிவுகள் கீழத்தேய நாடுகளில் காணப்படுகின்றன..! ஆதிக்கத்தால் முதலாளித்துவ வர்க்கங்களும்  அன்றைய காலத்தில் பெருகியிருந்தன..!

எமது முன்னோர்கள் அடிமைகளாக, அவர்களுக்கு உழைத்துக்கொடுத்தார்கள். தொழிற்புரட்சிகள், கல்வி, பொருளாதார வளர்ச்சிகள் வந்த பிறகு ஒவ்வொருவரும் உலகைப் பார்க்கும் விதம் தற்போது முற்றாக மாறிவிட்டது. காலத்திற்கு ஏற்ப, பெரும் செல்வந்தக் குடும்பங்களின் எண்ணங்களும் மாறி வருகின்றன..! உண்மையான  இயற்கையின் நிலையை அறிந்தால், உலகில் பிரிவுகளுக்கே இடமில்லை..! அனைத்தும்  பூலோக வாசிகளாகத்தான் இருக்கும்.!.

ரத்தன் டாட்டாவைப் பொறுத்தவரை எல்லாம் இருந்தும், சில விடயங்களில் அவர் நாட்டம் செலுத்தவில்லை..! இந்தப் பிரபஞ்ச உண்மையை, அவர் புரிந்துகொண்டதால் அன்பை மட்டும் கொடுத்துவிட்டு, அமைதியாக மின்சார மயாணத்தில் இயற்கையோடு கலந்துவிட்டார்..!

 


ஆ.கெ.கோகிலன்

15-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!