முயற்சி திருவினையாக்கும்..!
தண்டத்திற்கு இருக்கின்றது என்பது மாதிரியான எண்ணங்கள் உள்ளுக்குள்
இருந்தாலும் வெளிவிடாமல், சமாளித்து நடப்பார்கள்..! நமக்கும் நமது நிலை தெரியும்..!
காலப்போக்கில் அவர்களின் நச்சரிப்புக்கள் குறைய, எமக்குள் இருந்து பல குரல்களில், நச்சரிப்புக்கள்
எழுந்து எம்மைப் படாத பாடு படுத்தும்..! நிம்மதியாக நித்திரை கொள்ள விடாது..! சும்மா
படுத்திருந்து “நாசமாய் போகப் போகின்றாய்..” என முன்பு பெற்றோர் கெட்டது போல் அல்லது
அக்கறையுள்ள நெருங்கிய உறவுகள் கேட்டது போல், கேட்டு எமது நிம்மதியைத் தகர்க்கும்.
ஒரு முறை இரு முறை அல்ல..! ஓராயிரம் முறை அந்த சத்தங்கள் கேட்கும்..! முயற்சி போடாமல்
அந்தச்சத்தங்களைச் சமாளிக்க முடியாது என்று தோன்றும். அப்படித்தோன்றிய முயற்சிகளின்
விளைவாக தான், நான் இந்த இடத்திற்காவது வரமுடிந்தது..!
தற்போது, அந்த நிலைமைகள் மாறி, நாம் பெற்றோராக, மற்றவர்களால் மதிக்கக்கூடிய
பெரிய நிலைகளில் வந்ததால், எமது பிள்ளைகளுக்கும் இதே மாதிரியான தொடர் தொல்லைகளையும்,
அழுத்தங்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.
புலமைப் பரீட்சை, க.பொ.த (சாதரண தர) பரீட்டை மற்றும் க.பொ. த (உயர் தர) பரீட்சை அனைத்திலும்
நல்ல மதிப்பெண்கள் பெற்று, வைத்தியராகவோ அல்லது பொறியியலாளராகவோ வந்தால் தான் இந்த
பூமியில் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று இலங்கையிலுள்ள பெரும்பாலானோர் நம்புகின்றோம்.
ஒவ்வொருவரும் அதற்காகப் பல்வேறு வகையிலான பொறிமுறைகளை வைத்துப் பிள்ளைகளை, அப்பரீட்சைகளில்
வெற்றியடையச் செய்ய முனைகின்றோம். இதில் வெற்றிபெற்ற
பெற்றோர்கள், மேலும் தன்நம்பிக்கை பெற்று, தமது திட்டமே சரியானது என்று சூழலுக்கு ஆலோசனை
வழங்க, தோற்ற பெற்றோர்கள், துவண்டு பொய்யாக வாழ்வை நகர்த்துகின்றார்கள்..!
ஆனால், யாரும் யாரையும் இவ்வாறு செதுக்கிக் கொண்டுவரலாம் என முயற்சிப்பதில்
தவறு இல்லை. ஆனால், அது நடந்தால் நீங்கள் புண்ணியம் செய்துள்ளீர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் பாக்கியசாலிகள் என நம்புங்கள்..! ஏனையவர்கள், இனியாவது நல்லதைச் செய்து, தோற்றவர்கள்
வெற்றிபெற, நல்ல வழிகளைக்காட்ட முனையுங்கள்..! நடந்ததைப் பாடமாக எடுத்துக்கொண்டு, தவறுகளைத்திருத்தி,
மேலும் மேலும் சரியான வழியில் செல்ல முனையுங்கள்.
தோல்விகள், கஷ்டங்களைத் தந்தாலும், அது தான் எங்களைப் பலப்படுத்துகின்றது..!
மனங்களை இறுக்கமாக்குகின்றது..! எதையும் தாங்கும் பக்குவத்தைக் கொடுக்கின்றது..! வெற்றியோடு வாழ்வது என்பது இலகு..! அதில் சவால்கள் இல்லை. ஆனால்
இறைவனின் ஆசி இருக்கும்.
தோல்வியோடு வாழ்பவர்கள் பெரும் சவால்களைச் சந்திக்க நேரிடும். இறுதியில் ஒரு பெரிய வெற்றிக்கு இயற்கை, உங்களைத் தயார்படுத்தியிருக்கும்..!
அப்போது பட்ட தோல்விகளின் காயங்கள் ஆறும்.
அதுவரை வாழ்ந்த நரக வாழ்க்கையின் அர்த்தம், மற்றவர்களுக்கும் ஒரு பாடமாகும்.
இருக்கும் வாய்ப்புக்களை வெற்றிகளாக மாற்ற அதிகம் முயற்சி செய்யுங்கள்.
வெற்றி கிடைக்காமல் வாய்ப்புக்கள் முடிந்தாலும், உங்களுடைய முயற்சியின் ஆற்றல், இன்னொரு
துறையிலாவது உங்களை ஒரு பெரிய நிலைக்கு கொண்டுவந்து சேர்க்கும். கிடைக்க வேண்டியது
நிச்சயம் கிடைத்தேயாகும்..! கிடைக்கக்கூடாதது
என்பது கடைசிவரை கிடைக்காது..! இந்த உலக உண்மையைப் புரிந்தால், நாம் யாரும் கவலைப்பட
ஒன்றுமேயில்லை..!
நல்லவை நிலைக்கும்..! கெட்டவை அழியும்..!
ஆ.கெ.கோகிலன்
26-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக