அரசியலில் விஜய்..!
இன்று விஜயின் முதலாவது அரசியல் பயண மாநாடு நடந்து முடிந்துள்ளது..!
உண்மையில் நடிகர் விஜய் போனாலே கூட்டம் அள்ளும். அரசியலில் விஜய் புது அவதாரம் எடுப்பதால், இலட்சக்கணக்கானோர் வந்திருந்தார்கள்..! மக்கள் கூட்டத்தால்
அனைவரும் அரண்டிருப்பார்கள்..! குறிப்பாக அரசியல் வாதிகள் இப்படியான கூட்டத்தைச் சேர்க்க எவ்வளவு பணத்தைச்
செலவழிக்க வேண்டும். விஜய் என்ற ஒரு மந்திரப் பேருக்காக இவ்வளவு மக்கள் வந்தது அவரது மிகப்பெரிய பலம். அதில் எந்த நிலையிலும் அவர்
குறையவில்லை.
200 கோடி சம்பளம் வாங்கியவர், உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், பொழுதுபோக்கு
படங்களில் மாத்திரமே கவனம் செலுத்தியவர், அன்பாகப்
பண்பாகப் பேசக்கூடியவர் சுறா, வேட்டைக்காரன், பகவதி படங்களில் பேசியது மாதிரி பொங்கியது, பலருக்கு அவரைப்பற்றி
ஓட்ட பொரி என்ன..? பொரிக்கடலே கொடுத்துள்ளார்..!
அனைத்து அரசியல் கட்சிகளின் சாம்பாராக அவரது கட்சிக்கொள்கை அமைந்திருந்தது.
அவரது நடிப்புக்கு அடுத்த மாநிலங்களிலும், நாடுகளிலும் மக்கள் பணம்கொடுத்துப் பார்ப்பார்கள்.
அப்படியாக அவர்கள் விஜய்க்கு உதவலாம்..! ஆனால் அயல் மாநில மக்களும்,
பிற நாடுகளைச் சேர்ந்த மக்களும் நேரடியாக விஜய்க்கு
வோட்டுப்போட்டு உதவ முடியாது. வேணும் என்றால் தெரிந்த, தமிழ்நாட்டுக்காரனுக்கு விஜய்க்கு
வோட்டுப்போடச் சொல்லிப் பரிந்துரைக்கலாம்.
பாராட்ட வேண்டிய விடயம் தாய், தந்தையின் ஆசியுடன் மேடையில் பேச்சைத்
தொடங்கியது..!
வெறுத்த விசயம், படத்தில் நடிப்பது போல் ஜனரஞ்சகமாகப் பேசியது..! மக்களுக்கு
ரோல் மொடலாக இருக்க வேண்டியவர், நல்ல வகையில் நாகரீகமாகப் பேசப் பழக வேண்டும்.
அரசியலில் நல்லது செய்தால், எல்லாரும் விஜயைத் தூக்கி வைப்பார்கள்.
கடைசியாக வந்த கோட் படம் 500 கோடியைத் தொட்டாலும், அதனைப் பெரிய வெற்றியாகச் சொல்ல
முடியாது. விஜயின் சம்பளமே 200 கோடி என்றால் இந்த மாநாட்டின் செலவு, அந்தச் சம்பளத்தைவிடக்குறைவு
தான். மக்கள் காசை, பொறுப்பில்லாத படங்களில் நடத்துத் திருடிவிட்டு, அந்தக்காசைப் போட்டு,
திரும்ப அரசியலிலும் கோடி கோடியாகத் திருடப்போகின்றாரோ என்ற ஒரு ஜயமும் எழுகின்றது..!
அவரை வைத்து சினிமா எடுத்தவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு, அரசியலில் எப்படி கவனம் செலுத்தப்போகின்றார்
என்பதை வரும்காலம் சொல்லும்..?
சீமானைப்போல் தமிழன் என்று சொல்ல முடியாமல், கலைஞர் போல், எம்ஜிஆர்
போல் திராவிடக்கொள்கைக்குள் மாட்டி மூன்றாவது பெரிய திராவிடக்கட்சியாக வளர நிறைய வாய்ப்பு
விஜய்க்கு உண்டு..! ஆனால் தொடர்ந்து தமிழர்களை இவ்வாறு எல்லோரும் ஏமாற்றவதால், தமிழனே
உலகின் மிகவும் கீழான முட்டாள் என்று சொல்லத்தோன்றுகின்றது.
சினிமா வெறும் பொழுது போக்கில்லை என்று சொன்ன விஜய், எத்தனை சமூக சீர்திருத்தப்
படங்களிலும், யதார்த்த படங்களிலும் நடித்துள்ளார். குறைந்த பட்சம் ஒரு நியாயமான கொள்கையுடன்
பயணித்துள்ளாரா என்பதே தெரியவில்லை..!
இனி விஜயின் வழமையான படங்கள் பெருவெற்றிப்படங்களாக மாறுவது கடினம். ஆட்டம்
பாட்டத்தை தொடர்ந்து 50 வயதைத் தாண்டியும் செய்ய முடியாது என்பதால், ரஜனி விட்ட தவறைச்
செய்யாமல் பருவத்தே பயிர் செய்ய முனைகின்றார்.
சில நேரங்களில் அவரின் முடிவு வெற்றியாகவும் அமையலாம். ஒரு விடயம்
இலங்கை ஜனாதிபதி போல் தோழமையுடன் ஒரு ஆட்சியை நடாத்த முனையலாம். ஆனால் திராவிடக்கொள்கை
தமிழர்களுக்கு துரோகத்தையே தருவதால், தொடர்ந்து தமிழன் ஏமாறத் தயாராக இருக்க மாட்டான்
என்று தான் நான் நம்புகின்றேன்..!
தன்னை அரசியலில் பயமறியாக் குழந்தையாகச் சொல்லும் விஜய், எப்படி எழுந்து
பின்னர் விழுந்து நிமிர்ந்து நின்று ஓட்டம்
பிடிக்க சில ஆண்டுகள் எடுக்கும் என்று நினைக்கின்றேன். 2026 இல் விரைவாக ஓடக்கூடிய
அளவில் வளர்ந்தால் வெற்றிகள் சில சமயம் கிடைக்கலாம். இல்லை இன்னும் சில காலம் பொறுத்து,
2030இல் குடும்ப ஆட்சிகள் முடிவுக்கு வரும்
தருணத்தில் விஜயை மாற்றுத் தெரிவாகத் தமிழ்நாடு பார்க்கலாம்.
வீர வசனங்கள் பேசாது, நின்று நிதானமாக, பொய் சொல்லாது சரியான பாதையில்
சென்றால், விஜய்க்கு இருக்கின்ற ரசிகர் பலத்திற்கு, நல்ல ஒரு இடத்தை அரசியலில் பிடிக்கலாம்
என்று நான் நினைக்கின்றேன்.
இலங்கை அனுராவிடமும், வடக்கு அர்சுனாவிடமும், தமிழகம் விஜய்கும் வந்தால்
நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
அதற்கு முதல், விஜய் வரியேற்பு செய்வதை நிறுத்தி, அரசிற்கு செலுத்தவேண்டிய
அனைத்து வரியையும் செலுத்தி தான் ஒரு உத்தமர் என்பதை நிரூபிக்க வேண்டும். மனைவி, பிள்ளைகளிடம்
அன்பாக இருக்க வேண்டும். தன்னால் கஷ்டப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவி, தன்னால் சினிமா
துறைக்கு பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து நடிகர்களுடனும் நட்பைப்பேணி,
அனைத்து தமிழக நடிகர் சார்பிலும் ஆசிபெற்று, அடுத்த தேர்தல் களத்திற்கு தயாராக வேண்டும்.
புதிய படங்களில் நடிக்கலாம். ஆனால் நல்ல கருத்துள்ள சமூகத்திற்கு பயனான
படங்களில் நடித்து, உங்களை நம்பும், இளைய சமூதாயத்தை சரியான வழியில் வீட்டிற்கும்,
நாட்டிற்கும் பயனுள்ள மனிதர்களாக மாற்ற முன்நிற்க வேண்டும். அவர்களை மொக்கர்களாக மாற்றி,
தேவையில்லாமல் சக்தியை வெளியிட்டு, ஒரு பயனுமற்ற காரியங்களில் ஈடுபடுவதை விட மக்களுக்கு
உதவும் சக்திகளாக மாற்ற வேண்டும்.
மாறாகக், கள்ளப்பணங்களைப் பாதுக்க அரசியலே சரியான வழியிடம் என்று வந்தால்,
உண்மை, தெரிய பிழைப்பே நாறும். அரசியலில் சாக்கடை
இருந்தாலும் அதை தூய்மையாக்க முனைய வேண்டும். விடுத்து, சாக்கடையை இன்னும் பெரிதாக்கக்
கூடாது.
ஆ.கெ.கோகிலன்
27-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக