பல்லுக்கொதியும் நானும்..!
நீண்ட காலமாக பற்களில் கவனம் இருந்தாலும், கொரோனாவும், நரம்புப்
பிரச்சனையும் வர, எல்லாவற்றையும் இயற்கையிடம் விட்டுவிட்டேன். மருந்து எடுப்பதை விட,
மருந்து இல்லாமல் சரிப்படுத்த முடியாதா என ஆலோசிக்கத் தொடங்கினேன். முடி நரைப்பது,
உதிர்வது இயற்கை என்பது போல் உடலில் உள்ள உறுப்புக்களில் இறப்புக்கள் வாறது இயற்கை
என எடுத்துக்கொண்டேன். ஒரு முறை பல் வலித்தாலும்,
பொறுமையாக அந்த வலியைச் சகித்துக்கொண்டிருந்ததுடன், பொருத்தமான நல்ல தெரிந்த மருத்துவரும் அமையாத காரணத்தால்,
இயல்பாய் அந்தப்பல்லு விழுந்து விட்டது..! குறிப்பிட்ட ஒரு பல்லு இயற்கையாய் இறந்தது..!
அதனால் ஏற்பட்ட வலியை யோசித்தால், அது தாங்கக்கூடிய அளவிலேயே இருந்தது.
இந்த முறை பல்லில் நோ வர பல்லைப்பிடுங்க வேண்டும் என்று யோசித்தேன்.
காரணம் எனது வீட்டிலுள்ள பலர் இலகுவாகப் பல்லைப் பிடுங்கிவிட்டு இருப்பதாக உணர்ந்தேன்.
ஆனால் உண்மை எனக்கு வேறாக அமைந்துவிட்டது..! பல்லுக்கொதியை விட, பல்லுப்பிடுங்கிய பின்,
வந்த வலி வாட்டி எடுத்தது..! மருத்துவர் தந்த மாத்திரைகளைப் போட்டு இருந்தாலும் வலி
குறைவதாக இல்லை..! இரண்டு நாட்கள் அலுவலகம் போகவில்லை..!
நான் பொதுவாக, வருத்தம் இல்லாமல் மெடிக்கல் லீவு எடுக்க விரும்புவதில்லை.
20 வருடங்களுக்கு மேல் வேலைசெய்துள்ளேன். ஒரு கிழமை கூட, மெடிக்கல் லீவு எடுக்கவில்லை
எனநினைக்கின்றேன். இந்தக்கிழமை என்ன நடக்கப்போகின்றது
என்பதைக் கூறமுடியவில்லை..?
மருத்துவரைக் குறைகூற விரும்பவில்லை. இருந்தாலும் இவ்வளவு
நல்ல ஆரோக்கியமான வேரோடு இருக்கும் பல்லை பிடுங்கத்தேவையில்லை என்று அடித்துக்கூறியிருந்தால்,
நான் விட்டிருப்பேன். வலிவரும்போது, அங்கே தனியாகக் கஷ்டப்படவேண்டிவரும் என்பதற்காகத்
தான் பிடுங்கச்சொன்னேன். ஒரு அங்குல ஆழத்திற்கு தாழ்வாகக், காயம் ஏற்பட்டதால் எப்படி
மூன்று நாளில் அது ஆறும்..! அதனால் தான் உத்தரிக்கின்றேன்..!
இந்த உத்தரிப்போடு, அம்மாவும் விழுந்து, முகத்தில் வீக்கமும்,
ரத்தம் வேறு கண்டியும் இருப்பதைப்பார்த்து, நேற்று முழுக்க அவருடன் செலவிட்டேன்..!
பல்லுவலி இருந்தாலும் தாய்க்கு செய்ய வேண்டியதைச் செய்தேன்.
அதேபோல் மனைவியும் காலில் வீக்கத்தால் அவதிப்பட்டார். அவரையும்
கவனிக்க விரும்ப, அவர் ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்டு செல்கின்றார்..!
காலங்கள் சற்று கடினமாக இருந்தாலும், இயற்கையும் இறைவனும்
தரும் பலத்தால், அவற்றைக்கடக்க முடிகின்றது..!
பொதுவாக இயற்கையை நம்பும் நான், இடையில் இயற்கையால் படைக்கப்பட்ட
மனிதனை நம்பி, கவலைப்படுகின்றேன்..! திருமலையில், இரண்டு வகுப்புக்கள் என்னால் பாதிப்படைகின்றன..!
பொதுவாக நான் யாரையும் ஏமாற்றவோ, துன்பப்படுத்தவோ விரும்புவதில்லை. மாறாக அதிலிருந்து,
விலத்துவதையே வாடிக்கையாகக் கொண்டிருப்பவன். எனக்குப் பயம் கிடையாது..! ஆனால் வம்புகளை
வளர்க்கவோ, எதிரிகளைக் கூட்டவோ, சண்டைபிடிக்கவோ விருப்பம் கிடையாது. ஆனால், தவிர்க்க
முடியாவிட்டால், என்ன நடக்கும் என்பது, எனக்கே தெரியாது..?
என்வாழ்க்கையில் பல அவ்வாறான சம்பவங்கள் இருக்கின்றன..! ஆனால்
எனக்குள் இருக்கும் இன்னொரு நபரே அதற்குச் சொந்தக்காரன்..! அவனை இறுகக்கட்டி போட்டு,
அறிவாலும், ஆன்மீகத்தாலும் அடைத்து வைத்துள்ளேன்.
அவன் வெளியே வந்தால், மரணம் தவிர வேறு மார்க்கம் கிடையாது..! அவ்வளவு தான்.
ஆ.கெ.கோகிலன்
08-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக