அரச கல்வியின் நிலை..!

 

 


கடந்த வருடம் 2023 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சை எடுத்தவர்களின் பெறுபேறுகள் 2024 இல் வெளிவந்தன..! கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 346,976 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் மற்றும் 65,531 தனியார் விண்ணப்பதாரர்களும் இருந்தார்கள்..!

வழமையாகப் பாடசாலைகளில் இருந்து இரு முறைகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அந்த இருதவணைகளிலும் தவறினால், மீண்டும் ஒரு முறை தனிப்பட்ட ரீதியில், விண்ணப்பிக்க முடியும். முந்தைய காலங்கள் போல் அல்லாமல் பல வகையான உயர்கல்வி நிறுவனங்கள் தற்போது இலங்கையில் இருக்கின்றன..! குறித்த  துறைக்குத் தான் போகவேண்டும் என்றால் இலக்கை எட்டும்வரை முயற்சிக்கலாம். அப்படியான இலக்குகள் இல்லை என்றால் கிடைத்ததை வைத்து முன்னேறலாம்.

 2023 ஆம் ஆண்டு (2024) பரீட்சை மீளாய்வுகளுக்கு, ஜூன் 5 முதல் 19 வரை  விண்ணப்பித்தவர்களின் முடிவுகளுக்குப்பின்னர், பரீட்சையில் தோற்றிய 269,613 விண்ணப்பதாரர்களில் 173,444 பேர் அல்லது 64.33 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.

 2023 (2024) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்ற மொத்தம் 173,444 மாணவர்களில் 150,000 இற்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகத்திற்கு இந்தாண்டு தெரிவாகியுள்ளனர்..! ஏறக்குறைய பரீட்சைக்கு தோற்றியவர்களில் 50 வீதமானவர்கள் பல்கலைக்கழகம் போகத் தகுதி பெற்றிருந்தாலும், அவர்களில்  86 சதவீதமானோர் மட்டுமே பல்கலைகழகம் சென்றுள்ளார்கள்.

பரீட்சை எழுதியவர்களுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 37 சதவீதமானவர்கள்  பல்கலைக்கழக உயர்கல்வி படிக்கின்றார்கள். அதேவேளை மிகுதி 23,000 மாணவர்களில், எமது நிறுவனத்திலும் ஏறக்குறைய 50 வீதமான மாணவர்கள் படிக்கின்றார்கள்..! அதுமாத்திரமன்றி, ஆசிரியர் கல்லூரி, தனியார் பல்கலைக்கழகங்கள் இவ்வாறான பல உயர்கல்வி நிறுவனங்களில் மிகுதி 50 வீதமானோர் உயர்கல்வி படிக்கின்றார்கள்.

வடமாகாணத்தில் உயிரியல் பிரிவில் இந்த வருடத்தில் தோற்றிய 2328 மாணவர்களில் 1479 மாணவர்கள் பல்கலைக்கழகத் தகுதிபெற்றுள்ளார்கள்..! ஏறக்குறைய 64 சதவீதத்தினர் வெற்றிபெற, 36 சதவீதமானவர்கள் தோல்வியடைந்துள்ளனர்..!

இந்த 36 சதவீதமானவர்களில் அடுத்தவருடம் எவ்வளவு பேர் பல்கலைக்கழகம் செல்வார்கள் என்பதை, நான் உட்படப் பலர் எதிர் பார்த்து காத்திருக்கின்றார்கள். தவறின் அதற்கு அடுத்த வருடமாவது சாத்தியப்படுவது எத்தனை சதவீதத்தினருக்கு..?

இந்தப்பரீட்சை முறையால் பல்கலைக்கழகங்கள் எதுவும் சாத்தியப்படாமல் போனவர்கள் வாழ்க்கையில் எப்படியான முன்னேற்றத்தை அடைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

 ஆ.கெ.கோகிலன்

26-10-2024.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!